MYRADA - வேளாண் அறிவியல் நிலையம்

தொலைநோக்கு இலட்சியம்

செயல்படுத்தக்கூடிய ஆய்வு மற்றும் விரிவாக்க முறைகளில் ஏற்படும் மாற்றங்களுக்காக உதவும் நிறுவனம் மற்றும் தொடர்புகளைக் கொண்டு பல்வேறு நெருக்கடியான சூழ்நிலையில் பாகுபாடு இல்லாத நிலைத்த உற்பத்தி திறனை அடைவதற்கு, ஒருங்கிணைந்த இயற்கை வள மேலாண்மை மற்றும் பண்ணை திட்ட அணுகு முறையினை உருவாக்குவதாகும்.
 
MYRADA நிறுவனத்தின் தொலைநோக்கு இலட்சியம்
  • கிராமப்புற மக்களுக்கு தகுந்த நடைமுறை மாற்றங்களுக்கான செயல்களை துரிதப்படுத்துல் மற்றும் இந்த செயல்பாடுகள் நிலைப்பதற்கு மக்களின் உரிமைகள், நேர்மை, பாகுபாடு இல்லாமை மற்றும் ஒருவருக்கொருவர் உதவும் வகையில் தகுந்த புதிய அணுகுமுறையில் உருவான உள்ளூர் நிருவனங்களை உருவாக்கி நிர்வாகம் செய்தல்.
  • மக்களின் நியாயமான தேவைகள் மற்றும் அவற்றை வழங்கக்கூடிய இயற்கை வளங்களுக்கிடையேயான தொடர்பு நடவடிக்கைகளை சமன்செய்யும் வகையில் தன்னிறைவு அடைந்த மற்றும் தூய்மையான சுற்றுசூழலை உருவாக்கி அவை நீடித்து நிலைத்திருக்க உதவும் நிறுவனங்களை உருவாக்குதல்.
  • ஏழை மக்கள் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான உரிமைகளைப் பெறுவதற்கும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உரிமைகளைப் பாதுகாக்கவும் தகுந்த நிறுவனங்கள், யுக்திகள் மற்றும் திறமைகளை மக்களிடையே உருவாக்குதல்.
  • பஞ்சாயத்துராஜ் நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து எச்.ஐ.வி/எய்ட்ஸ்/பால்வினை நோய் தொடர்பான பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய உரிய நேரத்தில் தகுந்த சிறப்பான ஆரம்ப சுகாதார பராமரிப்பு மற்றும் கல்வி அறிவை துரிதப்படுத்துதல்
  • ஏழை எளிய மக்களுக்கு உதவக்கூடிய பொதுநலக் கொள்கைகளை செயல்படுத்த வழிவகை செய்தல்.
  • அரசுத் துறை மற்றும் அமைப்புசாரா நிறுவனங்களிடையேயான தொடர்புகளை வலுப்படுத்துதல்.
 

இலக்குகள்

  • மாறுபட்ட கடினமான நிலைகளில், புதிய மற்றும் பொருத்தமான பாதுகாத்தல் தொழில் நுட்பங்களைப் பண்ணைத் தொழில்களில் புகுத்தி அவற்றிலிருந்து பெறப்படும் வருமானத்தை அதிகரித்தல்
  •  நிலைத்த தொழில் வாய்ப்புகளை உருவக்குவதன் மூலம் வறுமையில் வாடும் குடும்பங்களின் வருமானத்தை அதிகரித்தல்
  •  சுய சார்புடைய மற்றும் ஆற்றல் வாய்ந்த உள் அமைப்புகளை ஊக்குவிப்பது
  •  வேளாண் அறிவியல் நிலையம் பணிபுரியும் பகுதிகளில் வாழும் குடும்பங்களுக்குச் சுகாதாரமான வாழ்க்கைச் சூழல் பண்புகளை உருவாக்கித் தருதல்
  •  வேளாண் சமுதயத்தின் நியாயமான மற்றும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஏற்ப ஆராய்ச்சிக் கொள்கைகளை வடிவமைப்பது

News & Events

 

விஞ்ஞன ஆலோசனைக் குழு கூட்டம்

 

வேளாண் அறிவியல் நிலையம் ஜுலை 23 ஆம் நாள் விஞ்ஞன ஆலோசனைக் குழு கூட்டம் நடத்தப்பட்டது

Read more...

Gallery

Feedback

Click here to Send your feedback about our website

Download Font

Click Here to Download Tamil Font to view Tamil Contents